ஸ்ரீ வல்லபாச்சார்யர் எழுதிய மதுராஷ்டகம் தமிழில்
அதரம் மதுரம் வதனம்
மதுரம்
நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம்
மதுரம்
மதுராதிபதேர்
அகிலம் மதுரம்
உன்
இதழும்
இனியது; முகமும் இனியது;
கண்கள்
இனியது; சிரிப்பும் இனியது;
இதயம்
இனியது; நடையும் இனியது;
மதுரா
மைந்தனே, எல்லாம் இனியது!
வசனம்
மதுரம் சரிதம் மதுரம்
வஸனம் மதுரம்
வலிதம் மதுரம்
சலிதம்
மதுரம் ப்ரமிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
உன்
சொல்லும்
இனியது; குணமும் இனியது;
உடைகள்
இனியது; உடலும் இனியது;
இயக்கம்
இனியது; உலவல் இனியது;
மதுரா
மைந்தனே, எல்லாம் இனியது!
வேணுர்மதுரோ
ரேணுர்மதுர:
பாணிற்மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம்
மதுரம் ஸக்யம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
உன்
குழலும்
இனியது; கால் தூசியும் இனியது;
கைகள்
இனியது; பாதம் இனியது;
நடனம்
இனியது; நட்பும் இனியது;
மதுரா
மைந்தனே, எல்லாம் இனியது!
கீதம்
மதுரம் பீதம் மதுரம்
புக்தம் மதுரம் சுப்தம்
மதுரம்
ரூபம்
மதுரம் திலகம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
உன்
பாடல்
இனியது; பட்டாடை இனியது;
உண்ணல்
இனியது; உறக்கம் இனியது;
உருவமும்
இனியது; திலகமும் இனியது;
மதுரா
மைந்தனே, எல்லாம் இனியது!
கரணம்
மதுரம் தரணம் மதுரம்
ஹரணம் மதுரம் ரமணம் மதுரம்
வமிதம்
மதுரம் ஷமிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
உன்
குறும்பு
இனியது; வெற்றி இனியது;
கள்ளம்
இனியது; உள்ளம் இனியது;
எச்சில்
இனியது; வெட்கம் இனியது;
மதுரா
மைந்தனே, எல்லாம் இனியது!
குஞ்சா
மதுரா மாலா மதுரா
யமுனா மதுரா வீசீ
மதுரா
சலிலம்
மதுரம் கமலம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
உன்
மணிகள்
இனியது; மாலை இனியது;
யமுனை
இனியது; அலைகள் இனியது;
தண்ணீர்
இனியது; தாமரை இனியது;
மதுரா
மைந்தனே, எல்லாம் இனியது!
கோபி
மதுரா லீலா மதுரா
யுக்தம் மதுரம் புக்தம்
மதுரம்
த்ருஷ்டம்
மதுரம் சிஷ்டம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
உன்
தோழியர்
இனியது; கொண்டாட்டம் இனியது;
கூடல்
இனியது; குணமும் இனியது;
பார்வை
இனியது; பாவனை இனியது;
மதுரா
மைந்தனே, எல்லாம் இனியது!
கோபா
மதுரா காவோ மதுரா
யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர்மதுரா
தலிதம்
மதுரம் பலிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
ஆயர்
இனியது; ஆக்கள் இனியது;
செண்டை
இனியது; பிறவி இனியது;
வீழல்
இனியது; ஆழல் இனியது;
மதுரா
மைந்தனே, எல்லாம் இனியது!
இதி
மதுராஷ்டகம் சம்பூர்ணம்.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக