மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 4 ஜூலை, 2017

'' திறந்த புத்தகம்'' - குறும்பட விமர்சனம்




என் ஆருயிர் அன்புத் தம்பி விக்ணேஷ் க்கு



    என் ஆருயிர் அன்புத் தம்பி விக்ணேஷ் க்கு அன்பு கலந்த வணக்கங்கள். உன்னுடைய "திறந்த புத்தகம்"  குறும்படம் பார்த்தேன். நன்றாக இருந்தது. நீ ஏற்கனவே எடுத்து .வி.எம் ஸ்டூடியோ வில் வெளியிட்ட ''முகநூலில் நீங்க நல்லவரா கெட்டவரா ?'' என்ற  குறும்படத்தை பார்த்தவன் என்கிற வகையில்..,  இந்த திறந்த புத்தகத்தை விமர்சனம் செய்யக் கூடிய அளவுக்கு நான் தகுதி படைத்திருக்கிறேன் என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால், சிலர் நாலுக்கு நாலு அறையில் அமர்ந்து கொண்டு எதையும் சாதாரணமாக சுலபத்தில் விமர்சனம் செய்து விடுகிறார்கள். நான் அவர்களை போல் அல்ல. என்னுடைய விமர்சனம் என்பது ஷார்ப்னரில் பென்சில் சீவுவதைப் போல உன்னை மென்மேலும் கூர்மை ஆக்க  வேண்டும் என்பது தான்



அதுமாத்திரமல்ல

 Review your goals twice every day in order to be focused on achieving them.

என்று சொல்வதைப்போலஉன்னுடைய இலக்கை நோக்கி மேலும் மேலும் பயணப்படுவதற்கு, உன்னை மென்மேலும் சுய பரிசோதனை செய்து கொள்வதற்கு என்னுடைய விமர்சனம் பயன்படும் என கருதுகிறேன்.

உன்னுடைய ''முகநூலில் நல்லவரா கெட்டவரா ?'' என்ற குறும்படத்தில்  அன்றைக்கு உன் வயதுக்கு ஏற்ற குழந்தைதனத்தோடு  என்ன என்ன தவறுகள் செய்தாயோ........ அதை இந்த திறந்த புத்தகத்தின் வாயிலாக நிவர்த்தி செய்து , நீ  முதிர்ச்சி  பெற்றிருப்பதாக எண்ணுகிறேன்

இன்று  (04.07.2017) சுவாமி விவேகானந்தரின்  நினைவு நாள்,  சுவாமி விவேகானந்தர் சொல்வார் ,



''If a man with an ideal makes a thousand mistakes, im sure that the man without an ideal makes fifty thousand. therefore it is better to have an ideals''

''லட்சியம் உடையவன் ஆயிரம் தவறுகள் செய்தால் அது இல்லாதவன் ஐயாயிரம் தவறுகள் செய்வான் என்பது உறுதி. ஆதலால் லட்சியம் மிகவும் தேவை.'' என்று சொல்வார்.


எனவே உன்னுடைய சிறு தவறுகள் அனைத்தும், உன்னை ஒரு லட்சிய மனிதனாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதனை என்னால் உணர முடிகிறதுஎனவே தவறுகளை செய் அதுவே உன்னுடைய ஞானாசிரியன் .

உன்னுடைய நடிப்பைப் ஒவ்வொன்றும் கூர்ந்து கவனித்தேன்........ குறிப்பாக உன் கண்களை கவனித்தேன் ........ அதில் சோர்வு அதிகம் தென்படுகிறது. குறைந்த பட்சம் 8 மணி நேரம் நிம்மதியாக உறங்கு. 16 மணிநேரம் உழை. அருமையான கதை கரு ......... முப்பத்தி ரெண்டரை நிமிடங்களில் சொல்லவந்த கருத்தை சொல்லி இருக்கிறாய். நான் மட்டும் ஒரு சின்னத்திரை இயக்குனராக மாத்திரம் இருந்திருந்தால் இந்த கருவை வைத்து 1000 எபிசோடு ஓட்டி இருப்பேன்.

அர்ஜுன் நடிப்பு......... உண்மையிலேயே பாராட்டதக்கது.......... பெரிய பணக்கார வீட்டு பிள்ளைகளின் இன்றைய நிலையை படம்பிடித்து காட்டி இருக்கிறார்

சைலேந்தர் சிங் ....... ரொம்ப காமாக இருக்க கூடியவர்........... அவரை இந்த குறும்படம் உணர்ச்சி மிக்கவராக காட்டி இருக்கிறது........ அவரது நடிப்பும்  பிரமாதம்.  

 தங்கை சஞ்சனா க்கு என்னுடைய வாழ்த்துக்கள்

        இறுதியில் ..................... , குடி , போதை , கோபம் இந்த மூணும் ஒரு தனி மனித வாழ்வை மாத்திரமல்ல இந்த ஒட்டுமொத்த  சமூகத்தையும் சீரழிக்கும் என்பதை சுட்டிக்காட்டி நிறைவு செய்திருக்கிறாய்


மிகப்பெரிய இயக்குனராக வர வாழ்த்துக்கள்.  வாழ்க வளமுடன் ....... வளர்க நலமுடன்


கே.பி .ரோஹித்கணேஷ்
(சொற்பொழிவாளர், கட்டுரையாளர்)

திருச்சி  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக