அனைவருக்கும்
ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள் (26.06.2017)
சம்சார பந்தத்தின் ஊடாக
நம்மை படைத்தவனையும், பசியால் பட்டினியால் வாடி,
பள்ளத்தில் அமிழ்ந்து கிடப்பவனை மீட்டுருவாக்கம் செய்வதும் தான் ஈகைத் திருநாளான
ரம்ஜான் பெருநாளில் நோக்கம். அதிலும் குறிப்பாக முகமது
ஷல் பெருமானாரின் எண்ணமும் கூட .
அதுமட்டுமல்ல ..... ஸல் பெருமகனார் அடிக்கடி
சொல்வது, " நம்முடைய சிந்தனை, செயல், நமக்கு கிடைத்திருக்கும்
பொருள் இவற்றின் ஊடாக மனித குலத்திற்கு
நன்மையை மட்டுமே செய்ய வேண்டும்.
தீமை பயக்கும் காரியங்களை செய்யக் கூடாது " என்பார்.
ஒருமுறை ஷல் பெருமகனார்,
புதிய ஆடை அணியும் போது
அதன் பெயரைச் சொல்லியபடி, “யா
அல்லாஹ்! நன்றிஅனைத்தும் உனக்கே. நீயே எனக்கு
இதனை அணிவித்தாய். நான் உன்னிடம் இதன்
நன்மையைக் கேட்கின்றேன். இது எந்த நோக்கத்திற்காக
தயாரிக்கப்பட்டதோ, அதன் நன்மையான அம்சத்தைக்
கோருகின்றேன். இந்த ஆடையின் தீமையான
அம்சத்தை விட்டும் உன் பாதுகாப்பைத் தேடுகின்றேன்,”
என்பார்.
அதாவது, அந்த ஆடையை
உடுத்திஇருக்கும் நேரத்தில் நன்மையை மட்டுமே செய்ய
வேண்டும். தீமையான செயல்கள் எதுவும்
செய்து விடக்கூடாது என்று அவர் கேட்கிறார்.
புத்தாடை மட்டுமல்ல, எந்த ஒரு பொருள்
கிடைத்தாலும், அதைக்கொண்டு நன்மையே செய்ய வேண்டும்
என்பதை, இந்தச் செயல் மனித
குலத்துக்கு எடுத்துக்காட்டுகிறது.
அதுமாத்திரமல்ல ஸல் பெருமகனார் மக்கள்
மத்தியில் உரையாற்றும் போது, “மனிதன் கியாமநாளில்
இறைவன் முன் நிறுத்தப்படுவான். அப்போது
இறைவன் அவனைப் பார்த்து, ''நான்
நோயால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஏன் என்னைப்
பார்க்க வரவில்லை?' என்பான்.
''தாகத்துடன் உன்
முன் நின்று தண்ணீர் கேட்டேன்.
ஏன் எனக்குத் தரவில்லை?' என்பான். அதற்கு என்ன பதில்
வைத்திருக்கிறீர்கள்?” என்று மக்களை பார்த்து
கேள்வி கேட்டார்.
உடனே
ஒருவர் எழுந்து, “இறைவன் அப்படிக் கேட்டால்
'எல்லா உலகங்களுக்கும் தலைவன் நீ. உன்னை
நோயோ, பசியோ, தாகமோ எப்படி
தாக்கும்?
அப்படி இருக்கையில் எங்களைக்
குறை சொல்வது நியாயமா?' எனக்கேட்பேன்,”
என்றார் ஒருவர்.
அதற்கு
ஸல் பெருமகனார் ,“ஒரு மனிதனின் பெயரை
இறைவன் குறிப்பிட்டு, 'அவன் நோயால் துன்பப்பட்டுக்
கொண்டிருந்தது உனக்குத் தெரியாதா? நீ ஏன் அவனுக்கு
ஆறுதல் சொல்வதற்காக செல்லவில்லை. அப்படி சென்றிருந்தால், அவனிடத்தில்
என்னைப் பார்த்திருப்பாயே!' என்பான். மற்றொரு மனிதனின் பெயரைக்
குறிப்பிட்டு,'அவன் உன்னிடம் பசி
என்று உணவு கேட்கவில்லையா? நீ
ஏன் அவனுக்கு உணவு தரவில்லை?' என்பான்.
அதற்கு நீ என்ன பதில்
வைத்திருக்கிறாய்?” என்று கேட்டார். அந்த
மனிதன் தலை குனிந்தான்.
அவனை அமரச்சொன்ன ஸல்
பெருமகனார் , மக்களைப் பார்த்து, “எல்லோரையும் நம் சகோதரர்களாகக் கருதி
அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
ஏழைகளுக்கு செய்யும் தொண்டு இறைவனுக்கு செய்யும்
தொண்டு,' 'என்றார்.இதன் மூலம்
மற்றவர்களுக்கு உதவும் பண்பு வளர வேண்டும்
என்பது அவரது கருத்து எனவே
இந்த ஈகைத்திருநாளில் முகமது ஸல் பெருமானாரின்
சிந்தனைகளை கடைபிடிப்போம் , அவரது வாழ்வியல் நெறிகளை
கலங்கரை விளக்கமாக கொண்டு வாழ்க்கை என்னும்
கப்பலில் பயணிப்போம்
அதுமாத்திரமல்ல, மன்னர்
அக்பர் அவர்களிடம் உதவிப் பெறுவதற்காக ஒருவர்
பள்ளிவாசலில் வெகுநேரமாய் காத்திருக்கின்றார்..தொழுகை நேரம் நெருங்கி
விட்டது .. மன்னர் அவர்களும் வந்து
விட்டார்.. இந்த நபர் ஓடிச்
சென்று மன்னரிடம் முறையிடுகின்றார்..
"மன்னர்
அவர்களே நான் பலரிடம் கேட்டும்
யாரும் உதவிப் புரியவில்லை .. நான்
பலவித கஷ்டங்களால் வாழ்க்கையில் சஞ்சலப்பட்டு கொண்டிருக்கிறேன்.. நீங்கள் உதவி செய்து
நல்வழிக் காட்டுங்கள்" ..என வேண்டுகிறார்..
கூர்ந்துக் கேட்ட மன்னர் அவர்கள்
தொழுகைக்கு நேரமாச்சி,, தொழுகை முடிந்த பின் இதே
இடத்தில் மீண்டும் என்னை சந்திக்கவும் என
சொல்லி அவசரமாக
மன்னர் அக்பர் அவர்கள்
தொழுகைக்கு சென்று விடுகிறார்......
தொழுகை முடிந்ததும்
மன்னர் அதே இடத்திற்கு வந்து உதவிக்
கேட்ட அந்த ஆளை தேடுகிறார்..அவரை காணவில்லை .. உடனே
தனது பணியாளர்களை அழைத்து அவரை தேடி
கண்டுபிடித்து அழைத்து வரும்படி ஆணையிட அவர்கள்
ஓடிச்சென்று வேறு இடத்தில் நின்றுக்
கொண்டிருந்த அந்த நபரை அழைத்து
வந்து மன்னரிடம் விடுகின்றனர் ..
மன்னர் அவரை பார்த்து
எங்கே சென்றீர் உமக்கு என்ன உதவி
வேண்டும் என கேட்க,,,
அந்த நபர் "இப்போ
உங்க உதவி எனக்கு வேண்டாம்
மன்னா" என்று அவர் சொல்ல,,
மன்னர் திடுக்கிட்டு
'தொழ போகும்போது உதவி கேட்டீர்,, தொழுது
விட்டு வந்து நானே உம்மை
அழைத்து உதவ முன் வரும்போது
வேண்டாம் எனகிறீரே என்ன காரணம் ???'
"மன்னா
தொழுகை முடிந்ததும் உங்களை பள்ளிக்குள் பார்த்தேன்..
எல்லா செல்வங்களும், அதிகாரங்களும் பெற்று இந்த மண்ணை
ஆளுகின்ற மன்னராகிய நீங்கள், இறைவனிடத்தில் கையேந்தி.. கண்மூடி
அமர்ந்து இருந்தபோது... அதைக்கண்ட எனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது
.. இப்பேற்பட்ட மன்னர் இறைவனிடமே
உதவி கேட்கும்போது நாம்
ஏன் மனிதர்களிடம் கேட்க வேண்டும் ,, நாமும்
இறைவனிடம் கேட்போமே என்று என்னை நானே
மாற்றிக்கொண்டேன் மன்னா'' என்றதும் .. மன்னரின்
கண்கள் கலங்கின..
மனதும்
கலங்கியது..
உடனே அவரை மரியாதை
கலந்த பார்வை பார்த்து விட்டு
, "நண்பரே உமது
எண்ணம் உண்மையாகட்டும், மேலும் உறுதியாகட்டும்..
மனிதர்கள் புரியும்
உதவிக்கு அளவு
உண்டு.. ஆனால் அல்லாஹ்
புரியும் உதவிக்கும்,அருளுக்கும்... அளவே கிடையாது .. யாராக
இருந்தாலும் அல்லாவிடம்தான் உதவி தேடியாக வேண்டும்... கடைசி
வரை இதையே கடைபிடியும்..." என்று கூறி
அப்போது தன் கைவசம் இருந்தவற்றை
அவரின் கையைப் பிடித்து வற்புறுத்தி
அவரிடம் கொடுத்து விட்டு மன்னர்
இறை சிந்தனையோடு நகர்கிறார்..
அந்த நபரோ இறைவனிடம்
கையேந்த பள்ளிக்குள் செல்கிறார்!! இறைவனிடம் ... கையேந்துங்கள்..
அவன்..... இல்லை
என்று சொல்லுவதில்லை......
அனைவருக்கும்.... ரமலான் நல்வாழ்த்துக்கள்......
கே.பி
.ரோஹித்கணேஷ்
(சொற்பொழிவாளர் & கட்டுரையாளர்)
திருச்சி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக